இலங்கையின் கூட்டுறவு இயக்கத்துடன் இணைந்த கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டு 1945ஆம் ஆண்டு கண்டி, பொல்கொல்லையில் கூட்டுறவு பாடசாலையாக தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் ஸ்தாபிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு கூட்டுறவு பாடசாலை புதிய உலகமயமாக்கல் மற்றும் தாராள பொருளாதாரம் என்பவற்றின் கீழ் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கு மீளாய்வு செய்யப்பட்ட பணிப்பாணையுடன் தற்போதுள்ள நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது. அத்தடன் கல்லூரி தற்போதைய பெயரையும் பெற்றது. அன்றிலிருந்து டிப்ளோமா, சான்றிதழ் மற்றும் குறுகிய கால பாடநெறிகள், உளவளத்துணை சேவைகள், பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை கூட்டுறவுத் துறை கற்கைகளுக்கு மாத்திரமல்ல தொழில்சார் துறைகளிலும் கல்விசார் துறைகளிலும் குறைகளை நிரப்புவதற்கும் அதன் சொந்த பணிப்பாணை பணிகளில் ஒரு பகுதியாகவும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிபுணத்துவ நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விசார் நிலையங்களிலும் தலை நகர் கொழும்புக்கு வெளியில் கல்வி மற்றும் பயிற்சிகளை அளிப்பதில் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் முதன்மை நிலையமாக வளர்ச்சியடைந்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப இளமானி பட்டத்திற்கும் இலங்கை AAT, CA என்பவற்றினால் நடத்தப்படுகின்ற தொழில்சார் கணக்கியல் பாடநெறிகளுக்குப் பரீட்சார்த்திகளைத் தயார்படுத்துவதும் அதன் புதிய மற்றும் பல்துறைசார்ந்த கல்வி சேவை வழங்குனர் என்பதற்கு சிறந்த இரண்டு உதாரணங்களாகும்.

தற்பொழுது கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய தொழில்சார்ந்தவர்களுக்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தினால் கல்விசார் மற்றும் தொழில்சார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நான்குவகையாக நடத்தப்படுகின்றன. அவையாவன

  • கூட்டுறவு அபிவிருத்தி சான்றிதழ் பாடநெறி
  • கூட்டுறவு அபிவிருத்தி டிப்ளோமா பாடநெறி
  • கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய தொழில்சார்ந்தவர்களுக்கும் கணக்கியல், வங்கி நடைமுறை, கணக்காய்வு, மனிதவள முகாமைத்துவம், நுண்நிதி, சந்தைப்படுத்தல், வியாபார முகாமைத்துவம் என்பவையாகும்.
  • கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய தொழில்சார்ந்தவர்களுக்கும் பல்வேறு துறைகளில் குறுகியகால பயிற்சிநெறிகள் நடத்தப்படுகின்றன.

கூட்டுறவுதுறை சாராதவர்களுக்கும், தொழில் சாராதவர்களுக்கும் பாடசாலையை விட்டவர்களுக்கும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொழில்சார் பாடநெறிகள் சில இருக்கின்றன. அவையாவன, வியாபார முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி டிப்ளோமாகணக்கியல் மற்றும் நிதி உயர் டிப்ளோமா AAT, பட்டயம் மற்றும் IBSL என்பவையாகும். தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொழில் சார்ந்தவர்கள், பாடசாலையை விட்டவர்கள், தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா, அலுவலக செயற்பாடுகள், கணினி வன்பொருள் பொறியியல் படிக்கின்ற பிள்ளைகள், கணினி கற்கின்ற பிள்ளைகள் ஆகியோருக்கு செயல்முறை விளக்க பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தரவுத்தல பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், இணையத்தளம் மின்னஞ்சல் AUTO CAD போன்ற பல தகவல் தொழில்நுட்ப பாடநெறிகளை வழங்குகிறது. மேலும் கணினி செயற்பாட்டு உதவியாளர்களுக்கு தேசிய வாழ்க்கைத் தொழிதரம் (NVQ) தகவல் தொழில்நுட்ப பாடநெறிகளையும் நடத்துகிறோம்.

தற்பொழுது தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் பல சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுகின்றது. சுர்வதேச கூட்டுறவு நேசப்பாடு (ICA) விவசாய வங்கி நடைமுறையில் பயிற்சியளிக்கும் சர்வதேச கூட்டுறவு நிலையம் (CICTAB), இந்தியா பூனாவில் உள்ள VAMINICOM பல்கலைக்கழகம் என்பவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். NICD, CICTAB மற்றும் VAMINICOM பல்கலைக்கழகம் என்பவை இணைந்து மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சிகள், பணியாட் தொகுதி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் வருடாந்த வெளிநாட்டு விஜயங்கள் என்பவற்றை ஒழுங்குசெய்கின்றன.

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் கல்விசார் பிரிவு மேற் குறிப்பிட்ட அனைத்து கல்விசார் மற்றும் தொழில்சார் நிகழ்ச்சித்திட்டங்களை முகாமைப்படுத்தும் மற்றும் இணைப்பாக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுகிறது. மாணவர்களைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்களைத் தயாரித்தல், பாட உபகரணங்கள், வருடாந்த பயிற்சி விபரக்கொத்து, இலங்கை மற்றும் சர்வதேச கூட்டுறவு மற்றும் தொழில்சார் நிறுவகங்களடன் இணைப்பாக்கம் கல்விசார் மற்றும் திறன்விருத்தி செயற்பாடுகளையும் பரீட்சைகளையும் நடத்துதல் என்பவை கல்விசார் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்ற பிரதான கடமைகளாகும்.

பணியாட்தொகுதியினர் பிரிவு

கலாநிதி, எச்.எம்.டப். ஆரியரத்ன ஹேரத்
PhD, MPhil, MSc, BA
பணிப்பாளர் - (கல்வி மற்றும் அபிவிருத்தி)

தொழில்நுட்ப பணியாட்தொகுதியினர்

திருமதி. ரிசாந்தி விக்கிரமசிங்க
HNDC (B.com), HDIT, DIT, NCICTT - NVQ Level 4
கணினி போதனாசிரியர்
திரு. சானக்க திசாநாயக்க
DiTEC, Diploma in IT BCS (UK), HDCS
கணினி போதனாசிரியர்

பணியாட்தொகுதியினர்

செல்வி. குமுதுகுசும் ரத்னசிறி
BSc Special (Hons) In IT, PGd in IM, MSc in IM
கணினி நிகழ்ச்சியமைப்பு அதிகாரி
செல்வி. தீபானி நவரத்ன
BA
நிர்வாக அதிகாரி (மாணவர் சேவை)
செல்வி ஏ.ஜி.எஸ்.என். சந்தரசேன
BA
அபிவிருத்தி உத்தியோகத்தர்
செல்வி. டப்.டப்.எம்.ஜே.சி. விஜேசேகர
செயலாளர் நடைமுறைகள் - ஆங்கில மொழிமூலம்
அலுவலக உதவியாளர்
செல்வி. எச்.பி.டீ. குணவர்தன அலுவலக உதவியாளர்
செல்வி டீ.எம்.பி.டீ.குணசேகர
BA
 

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் நூலக பணியாட்தொகுதியினர்

திருமதி. வசந்தா இலங்கதிலக்க
BA, MA
சிரேஷ்ட நூலக பொறுப்பாளர்
திருமதி. லக்மினி அத்தநாயக்க
நூலக மற்றும் தகவல் விஞ்ஞான டிப்ளோமா
உதவி நூலக பொறுப்பாளர்
செல்வி. தீபானி புஸ்பகுமாரி அலுவலக உதவியாளர் 

ஆய்வு பிரிவு பணியாட்தொகுதியினர்

திரு. பிரபாஷ் சிறிவர்தன
BA, MPhil, LLB Reading
சிரேஷ்ட ஆய்வாளர்