நாட்டுக்கும் கூட்டுறவு துறைக்கும் உயர்தரமான சேவையை வழங்கக்கூடிய வகையில் கூட்டுறவு முகாமைத்துவத்தில் கூட்டுறவு உத்தியோகத்தர்களின் அறிவையும் திறனையும் மேம்படுத்துவது இந்த பணிப்பாணை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதன் பிரகாரம், மத்திய அரசாங்கத்திலும் கூட்டுறவு மாகாண திணைக்களங்களிலும் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொல்கொல்ல, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தினால் நடத்தப்படுகின்ற கூட்டுறவு அபிவிருத்தி சான்றிதழ் பாடநெறி மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி டிப்ளோமா பாடநெறி என்பவற்றைப் பின்பற்ற தகுதி பெறுகின்றனர்.

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்திற்கு அதன் அனைத்து பொறுப்புகளையும் செயலாற்றுவதில் 70 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் உண்டு. நாட்டின் அபிவிருத்தி தேவைக்கு ஏற்றவகையில் கூட்டுறவுத்துறை மனித வள ஆற்றலை மாற்றியமைத்தல் தொடர்பில் வினைத்திறன் மிக்க மற்றும் பயனுறுதிமிக்க பதில் கிடைத்துள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி சான்றிதழ் பாடநெறி

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அவர்களுடைய முதல் வினைத்திறன் தடைகாண் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக இந்த பாடநெறியைப் பின்பற்ற தகுதி பெறுகின்றனர். அத்துடன் அவர்களுடைய சேவையை நிரந்தரப்படுத்திக்கொள்ளும் நிலையையும் பெறுகின்றனர்.

கூட்டுறவு அபிவிருத்தி டிப்ளோமா பாடநெறி

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தொழிலில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களுடைய இரண்டாவது வினைத்திறன் தடைகாண் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக இந்த டிப்ளோமா பாடநெறியைப் பின்பற்ற தகுதி பெறுகின்றனர்.

பணிப்பாணை பாடநெறிகள்