தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் (NICD) கல்வித்துறையில் 70 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறந்த அனுபவம் கொண்ட கல்வி நிறுவகமாகத் திகழ்கிறது.

இந்த நிறுவகம் பாடசாலையை விட்டவர்களுக்கு அல்லது உயர் கல்வி கற்கின்றவர்களுக்கு தொழில் சந்தையில் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு அதன் பரப்பெல்லையை விரிவுபடுத்தி 2011ஆம் ஆண்டு தொழில்சார் கணக்கியல் மற்றும் வங்கி நடவடிக்கைமுறை பாடத்திட்டத்தை ஆரம்பித்தது.

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் (NICD) இலங்கை அரசாங்கத்தில் தனி நிறுவகமாக இருக்கின்ற அதேநேரத்தில், இலங்கையில் கணக்கியல் வங்கி நடைமுறை நிறுவகத்துடன் கூட்டுச்சேர்ந்து இயங்குகின்றது. இது கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழ் இருக்கின்றதோடு மாணவர்களுக்கு தொழில்சார் பரீட்சைகளையும் நடாத்துகின்றது.

மேலும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் (NICD) ஒர தொழில்சார் கல்வி நிறுவகமாக பொல்கொல்ல சந்தியில் அமைதியான ரம்மியமான கற்பதற்கும் கற்பிப்பதற்கும் உகந்த  இயற்கை சூழலில் அமைந்திருக்கின்றது. கண்டி நகரத்திலிருந்து ஒருசில கிலோமீற்றர் தூரத்தில் பொல்கொல்ல அமைந்திருக்கின்றது. அதுமாத்திரமல்ல குருநாகல், கட்டுகஸ்தொட்டை, மாத்தளை, வத்துகாமம் போன்ற பிரதேசங்களிலிருந்து நேரடியாக இலகுவாக வரக்கூடிய குறுகிய தூரத்தில் அமைந்திருக்கின்றது.

மிக முக்கியமாக, பெரும்பாலான எமது விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்கள் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகங்கள் என்பவற்றிலிருந்து வருகின்றனர். இவர்கள் முதுமானிப் பட்டம், பட்டப்பின்படிப்பு டிப்ளோமா தொழில்சார் தகைமைகள் போன்ற உயர் தகைமைகளைக் கொண்டவர்களாக இருப்பது சிறப்பம்சமாகும். இவர்கள் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட சிறந்தமுறையில் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின்மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் (NICD) என்பது,

 • AAT வியாபார பாடசாலை பிராந்திய நிலையம்
 • AAT தத்துவம்பெற்ற கல்வி நிலையம் (AECs)
 • CA இலங்கை பதிவுசெய்யப்பட்ட கற்பிக்கும் கல்லூரி
 • IBSL அங்கீகரிக்கப்பட்ட கல்வி பங்காளி
 • CA இலங்கையின் பல்லூடக ஆங்கில மொழி நிலையம்
 • AAT தகவல் நிலையம் - கண்டி

 

வியாபார முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி டிப்ளோமா

வியாபார முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி டிப்ளோமா
தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம்

நிகழ்ச்சியின் நோக்கம்

கூட்டுறவு துறையில் வெற்றிகரமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு அடிப்படை முகாமைத்துவம், வர்த்தகம், சமூக பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்காகப் பரீட்சார்த்திகளை முன்னெடுப்பது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். உயர்தர கல்வித் தகைமைகளைக் கொண்டுள்ள பாடசாலையை விட்டவர்களுக்கும் முகாமைத்துவம், வர்த்தக அபிவிருத்தி என்பவற்றில் தகைமை போதாததன் காரணமாக கூட்டுறவுத் துறையில் சந்தர்ப்பம் மறுக்கப்பட்ட, தற்பொழுது தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

அனுமதி அளவுகோல்

பின்வரும் தகைமைகளைக் கொண்ட பாடசாலையை விட்டவர்கள் இலக்கு குழுவாக இருக்கின்றனர்:

 • க.பொ.த (உ/த) பரீட்சையில் எல்லா பாடங்களிலும் சித்தியெய்தியவர்கள்.
 • கைத்தொழில் துறையில் பொருத்தமான மட்டத்தில் இரண்டு வருட கைத்தொழில் அனுபவத்துடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் இரண்டு பாடங்களில் சித்தியெய்தியவர்கள்.
 • கைத்தொழில் துறையில் பொருத்தமான மட்டத்தில் நான்கு வருட கைத்தொழில் அனுபவத்துடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியெய்தியவர்கள். அல்லது,
 • தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் கற்கை சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய சமமான தகைமை கொண்டவர்கள்.

பாடத்திட்டம் / உள்ளடக்கம்

 • முகாமைத்துவ கொள்கைகள்
 • அபிவிருத்தியின் பிரச்சினைகளம் சவால்களும்
 • அடிப்படை வியாபார கணிதமும் புள்ளிவிபரமும்
 • முகாமைத்துவம் மற்றும் வியாபார நிர்வாகம் என்பவற்றில் சமூகவியல்
 • தொழில் முயற்சி
 • சந்தைப்படுத்தலுக்கான அறிமுகம்
 • கணக்கு வைப்புமுறை நடவடிக்ககைள்
 • முகாமைத்துவத்திற்கான தகவல் தொழில்நுட்பம்

பாடநெறியின் கால எல்லை

1 வருடம் (வார இறுதி நாட்கள்)

* டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்கின்றவர்களுக்கு தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தினால் வழங்கப்படுகின்ற வியாபார முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியில் டிப்ளோமா கிடைக்கும்.

AAT வியாபார பாடசாலை பிரந்திய நிலையம்

AAT வியாபார பாடசாலை ஒரு வியாபார மூலோபாய அலகாகும் (SBU). இது இலங்கையின் கணக்குவைப்புமுறை தொழில்நுட்ப சங்கத்தின் கீழ் இயங்குகின்றது. இது தனிப்பட்ட அபிவிருத்தியை நாடுகின்றவர்களுக்கு அங்கீகாரத்தையும் திறனையும் மேம்படுத்துவதற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

கணக்கு வைப்புமுறை நடவடிக்கைகள் மற்றும் நிதியில் உயர் டிப்ளோமா

இலங்கையிலும் சர்வதேசத்திலும் பிரதானமாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான  தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கு அவர்களுடைய துறையில் முன்னேறுவதற்கு பங்கேற்கின்றவர்களுக்கு தேவைப்படுகின்ற திறன் மற்றும் மனோபாவத்துடன் கணக்கு வைப்புமுறை மற்றும் நிதி துறையில் சிறந்த கோட்பாட்டு அடிப்படையை வழங்குவதற்கு கணக்கீடு மற்றும் நிதி துறையில் உயர் டிப்ளோமா (HDAF) மற்றும் கணக்கு வைப்புமுறை மற்றும் நிதி துறையில் டிப்ளோமா பாடங்களை புதிய கட்டமைப்புடன் தனிப்பட்ட அபிவிருத்தியை நாடுகின்றவர்களுக்காக அவர்களுடைய திறனை மேம்படுத்தி தலைவர்களாகும் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நோக்கில் AAT வியாபார பாடசாலை 'ஓர் உயர் கல்வி நிறுவகமாக மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் நிறைவேற்று அபிவருத்திக்கும் கவனம் செலுத்துவதற்கு இப்பாட நெறிகளை ஆரம்பித்துள்ளது.

கணக்கு வைப்புமுறை மற்றும் நிதி துறையில் உயர் டிப்ளோமாவின் (HDAF) நோக்கம்

வசதிப்படுத்துனர்களின் பிரகாரம், கணக்கீடு, நிதி, முகாமைத்துவம், பொருளாதாரம் மற்றும் ஏனைய தொடர்புபட்ட சமூகவியல் மற்றும் தீர்மானம் எடுக்கும் நடவடிக்கைகள், சிந்தனை ஆற்றலை மேம்படுத்துதல், தொடர்பாடல், பேச்சுவார்த்தை, பகுப்பாய்வு ரீதியில் தொழில்சார் மற்றும் வியாபார அமைப்புக்குள் பிரச்சினைகளைத் தீர்த்தல், தலைமைத்துவத்தைக் காட்சிப்படுத்தல், குழுவாக வேலைசெய்யும் ஆற்றல், கற்கையில் ஈடுபடுதல், தொழில்சார் சூழலை உள்வாங்கிக்கொள்ளுதல் இறுதியாக வேலை மற்றும் சமூதகத்திற்காக ஆக்கபூர்வமான பொறுப்புக்களையும் மனோபாவத்தையும் விருத்தி செய்துகொள்ளுதல் கணக்கு வைப்புமுறை மற்றும் நிதி துறையில் உயர் டிப்ளோமாவின் நோக்கமாகும்.

இலக்கு குழு

இப்பாடநெறி ஏற்கனவே கணக்கீடு மற்றும் நிதி துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் உயர்தர கல்வியின் பின்னர் பாடசாலையை விட்டவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

AAT இறுதி மட்டத்தைப் பூர்த்திசெய்தவர்கள் அல்லது அதற்கு சமமான தகைமையுள்ள மாணவர்களுக்கு உயர் டிப்ளோமாவுக்கு நேரடியாகப் பிரவேசிக்க முடியும்.

நுழைவு தேவகைளும் முன்னேற்ற பாதையும்

காலவரையறை (2 வருடங்கள்/ 60 காலத்தவணை / 4 அரையாண்டு தவணைகள்)
 • கணக்கு வைப்புமுறை மற்றும் நிதி டிப்ளோமா (DAF) / 1 வருடம் (30 காலத்தவைணையுடன் 2 அரையாண்டு தவணைகள்)
 • கணக்கு வைப்புமுறை மற்றும் நிதியில் உயர் டிப்ளோமா (HDAF)
பாட கட்டமைப்பு
பாட குறியீடு பாட தலைப்பு தேசிய கற்கை மணித்தியாலங்கள் No. of Credits
வருடம் I : அரையாண்டு தவணை I
AF1301 நிதிசார் கணக்கு வைப்புமுறை கோட்பாடுகள் 150 3
AF1302 பொருளாதார கோட்பாடுகள் 150 3
AF1303 முகாமைத்துவ கோட்பாடுகள் 150 3
AF1304 வியாபார கணிதமும் புள்ளிவிபரமும் 150 3
AF1305 தகவல் தொழில்நுட்ப அறிமுகம் 150 3
வருடம் I : அரையாண்டு தவணை II
AF1306 நிதிசார் கணக்கு வைப்புமுறை இடைநிலை 150 3
AF1307 முகாமைத்துவ கணக்கு வைப்புமுறை அறிமுகம் 150 3
AF1308 நிதிசார் முகாமைத்துவம் 150 3
AF1309 வர்த்தக சட்டம் 150 3
AF1310 வியாபார ஆங்கிலம் 150 3
வருடம் II : அரையாண்டு தவணை I
AF2301 உயர் நிதிசார் கணக்கு வைப்புமுறை மற்றும் ஆவணப்படுத்தல் 150 3
AF2302 முகாமைத்துவ கணக்கு வைப்புமுறை மற்றும் கட்டுப்பாடு 150 3
AF2303 மனித வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் 150 3
AF2304 முகாமையாளர் பொருளாதாரம் 150 3
AF2305 கணக்கு வைப்புமுறை மற்றும் நிதிக்கான புள்ளிவிபர பகுப்பாய்வு  150 3
வருடம் II : அரையாண்டு தவணை II
AF2306 நிதிசார் சந்தைகள் மற்றும் நிறுவகங்கள் 150 3
AF2307 செயற்பாடும் கருத்திட்ட முகாமைத்துவமும் 150 3
AF2308 வரிவிதித்தல் அறிமுகம் 150 3
AF2309 கூட்டுத்தாபன சட்டம் 150 3
AF2310 கணக்கு வைப்புமுறை தகவல் முறைமைகள் 150 3
மொத்தம்     60

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான கணினிமயப்படுத்தப்பட்ட கணக்குவைப்புமுறை (10 CPD காலத்தவணைகள்)

காலவரையறை 12 வாரங்கள்
பாட உள்ளடக்கம்
 • Tally
 • MYOB
 • QuickBooks
 • Sage
விரிவுரைகளும் செயல்முறையும் வார இறுதி நாட்கள்

வரிவிதிப்பு பாடநெறி  (10 CPD காலத்தவணைகள்)

காலவரையறை 12 வாரங்கள்
பாட உள்ளடக்கம்
 • வருமான வரி (தனிப்பட்டவர்கள் மற்றும் கம்பனிகள்)
 • கணிப்பிடல்
 • வரி நிர்வாகம்
 • வரி திட்டமிடல்
 • வரி விடுமுறை நாட்கள்
 • வரி வீத சலுகை
 • முத்திரை தீர்வை
 • RAMIS அறிமுகம்
 • VAT & SVAT
 • நாடுகாக்கும் வரி
 • ESC
 • தக்கவைத்துக்கொள்ளும் வரிகள்
 • ஏனைய வரிகள்
விரிவுரைகளும் செயல்முறையும் வார இறுதி நாட்கள்

AAT தத்துவம்பெற்ற கல்வி மையம் (AECs)

 • தொழில்சார் கணக்கு வைப்புமுறை தொழில்நுட்பவியலாளராகுதல்
 • இலங்கை கணக்கு வைப்புமுறை தொழில்நுட்பவியலாளர் சங்கம்

நோக்கமும் பயன்களும்

 • நிறுவன ரீதியான நிதியிடல் நடவடிக்கைகளையும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைமுறைகளையும் ஆவணப்படுத்துதல், புலனாய்வு மற்றும் பகுப்பாய்வைத் திட்டமிடல் என்பவற்றில் தொழில்சார் நிபுணர்களை உருவாக்குதல்.
 • சமூக பொறுப்புகளின் சார்பில் கூட்டுறவு துறைசாராத மாணவர்களுக்கு புதிய கல்வி மற்றும் தொழில்சார் மார்க்கத்தை அறிமுகப்படுத்துதல்.
 • முகாமைத்துவத்திலும் கணக்கு வைப்பு துறையிலும் முதல்தர தொழில் நிபுணர்களை உருவாக்குதல்.

நுழைவுக்கான தேவைகள்

 • க.பொ.த (சா/த) (இல) பரீட்சையில் 06 பாடங்களில் சித்தி அல்லது
 • க.பொ.த (சா/த) (ஐஇ) பரீட்சையில் 05 பாடங்களில் சித்தி
 • க.பொ.த (உ/த) (இல/ஐஇ) பரீட்சையில் 02 பாடங்களில் சித்தி அல்லது
 • அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனமொன்றில் கணக்கு எழுதுவினைஞர்/கணக்காய்வு எழுதுவினைஞர்/ கணக்கு பதிபவர்/கணக்கு பயிலுநர் என்றவகையில் 05 வருட அனுபவம் அல்லது
 • இலங்கை AAT நிறுவனத்தின் நிர்வாக பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய சமமான தகைமைகள்

பாடத்திட்டம் / உள்ளடக்கம்

கணக்கு வைப்புமுறை உதவியாளர் (AA1 மட்டம்)
 • நிதிசார் கணக்கு வைப்புமுறை அடிப்படை (FAB)
 • வியாபாரத்தின் தொகைசார்ந்த முறைகள் (QMB)
 • வியாபாரத்திற்கும் கணக்கு வைப்புமுறைக்குமான பொருளாதாரம் (EBA)
 • வியாபார தொழிற்பாடும் முகாமைத்துவமும் (BOM)
கணக்கு வைப்புமுறை பகுப்பாய்வாளர் (AA2 மட்டம்)
 • உயர் நிதிசார் கணக்கு வைப்புமுறை  (AFA)
 • கிரய கணக்கு வைப்புமுறையும் ஆவணப்படுத்தலும் (CAR)
 • வியாபார முகாமைத்துவமும் மூலோபாயமும் (BMS)
 • வியாபார சட்டமும் நன்னெறியும் (BLE)
கணக்கு வைப்புமுறை அசோசியேட் (AA3 மட்டம்)
 • நிதிசார் கணக்கு வைப்புமுறையும் ஆவணப்படுத்தலும் (FAR)
 • முகாமைத்துவ கணக்கு வைப்பு முறையும் நிதியும்  (MAF)
 • நடவடிக்கைமுறை கட்டுப்பாடும் கணக்காய்வும் (PCA)
 • கூட்டுத்தாபன மற்றும் தனிப்பட்ட வரிவிதிப்பு (CPT)
அறிவு (திறன்) கெப்ஸ்டோன்
 • வினைத்திறன்மிக்க தொடர்பாடல் திறன்கள் (ECS)
 • தகவல் தொழில்நுட்ப திறன்கள் (ITS)
கால எல்லை 1 ½  வருடங்கள் (1 மட்டத்திற்கு 6 மாதங்கள்)
விரிவுரையும் செயல்முறையும் ஜனவரி முதல் யூலை வரை (வார இறுதி நாட்கள்)
யூலை முதல் டிசம்பர் வரை (வார இறுதி நாட்கள்)

CA இலங்கை கற்பிக்கும் கல்லூரி

தொழில்சார் பட்டய கணக்காளராதல்

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம்

நோக்கமும் பயன்களும்
 • கணக்கு வைப்புமுறை துறையை சுமுகமாகப் பராமரிப்பதற்கு உயர்தர மனித மூலதனத்தை அளித்தல்
 • வியாபார துறைக்கு கணக்கு வைப்புமுறை திறன்களும் மனோபாவமும் உள்ள தொழில்சார் நிபுணர்களை செயல்முறை அறிவுடன் வழங்குதல்
 • கணக்கு வைப்புமுறையில் தொழில்சார் நிபுணர்களை உருவாக்குதல்
நுழைவுக்கான தேவைகள்

க.பொ.த (உ/த) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி

பாடத்திட்டம் / உள்ளடக்கம்
நிறைவேற்று மட்டம்

அறிவுத் தூண்

 • நிதிசார் கணக்கு வைப்புமுறை மற்றும் ஆவணப்படுத்தல் அடிப்படை
 • முகாமைத்துவ கணக்கு வைப்பு முறை தகவல்
 • வரிவிதிப்பு மற்றும் சட்ட அடிப்படை
 • நடவடிக்கை முறை, உறுதிப்படுத்தல் மற்றும் ஒழுக்கநெறி
 • முகாமைத்துவத்திற்கான வர்த்தக உள்முகம்

திறன் தூண்

 • நிறைவேற்று தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன்
 • நிறைவேற்று தகவல் தொழில்நுட்பமும் முறைமைகளும்
வியாபார மட்டம்

அறிவுத் தூண்

 • வியாபார நிதிசார் ஆவணப்படுத்தல்
 • வியாபார முகாமைத்துவ கணக்கு வைப்பு
 • வியாபார வரிவிதிப்பு மற்றும் சட்டம்
 • நடவடிக்கைமுறை, உறுதிப்படுத்தல், ஒழுக்கநெறி மற்றும் கணக்காய்வு
 • வியாபார பெறுமதி உருவாக்கல்

திறன் தூண்

 • வியாபார தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன்
 • வியாபார தகவல் தொழில்நுட்பமும் முறைமைகளும்
கூட்டுத்தாபன மட்டம்

அறிவுத் தூண்

 • கூட்டுத்தாபன நிதிசார் ஆவணப்படுத்தல்
 • கூட்டுத்தாபன நிதி மற்றும் இடர் முகாமைத்துவம்
 • கூட்டுத்தாபன வரிவிதிப்பு
 • கூட்டுத்தாபன ஆளுகை, உறுதிப்படுத்தல் மற்றும் ஒழுக்கநெறி
 • கூட்டுத்தாபன மூலோபாயம் மற்றும் உடன்வாழ்நர்

திறன் தூண்

 • கூட்டுத்தாபன தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன்
 • கூட்டுத்தாபன தகவல் தொழில்நுட்பமும் முறைமைகளும்

தனிப்பட்ட தூண்

பட்டய கணக்கின் அபிபிருத்தியில் செயல்முறைப் பயிற்சி பிரதான பங்குவகிக்கின்றது. 2015 பாடத்திட்டம் தனிப்பட்ட தூண் ஊடாக மாணவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு செயல்முறை பயிற்சியின் மூலம் உயர்வளிக்கிறது.

கால எல்லை நிறைவேற்று மட்டத்திற்கு 06 மாதங்கள்
விரிவுரையும் செயல்முறையும் நிறைவேற்று மட்ட பட்டயம் ஆங்கில மொழிமூலம் - செப்டம்பர்/ மார்ச் பரீட்சை
வியாபார மட்ட பட்டயம் ஆங்கில மொழிமூலம் - யூலை/ டிசம்பர் பரீட்சை

IBSL அங்கீகரித்துள்ள கல்வி பங்காளர்

சிறந்த வங்கியாளராகுங்கள்

இலங்கை வங்கியாளர்கள் நிறுவகம்

நோக்கமும் பயன்களும்
 • நவீன உள்ளூர் வங்கி நடைமுறை சந்தைக்கு சிறந்தமுறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழல்சார் தமைகளுடன் தொழில்சார் வங்கியாளர்களை அறிமுகப்படுத்துதல்
 • தொழில்சார்மட்ட நுண்நிதி வங்கியாளர்களைத் தயார்படுத்துவதன்மூலம் இலங்கை நுண்நிதி வங்கித் துறைக்கு வலுவூட்டல்
 • I வங்கி நடைமுறை மற்றும் நிதிசார் துறை ஆகிய இரண்டிற்கும் தொழில்சார் நிபுணர்களை உருவாக்குதல்
நுழைவுக்கான தேவைகள்

IABF பரீட்சைக்கான பரீட்சார்த்திகளை சேர்க்கும் விதிகள்

 • க.பொ.த (உ/த) அல்லது அதற்கு சமமான இலங்கை அல்லது வெளிநாட்டு பரீட்சையில் 2 திறமை சித்திகளுடன் 03 பாடங்களில் சித்தி மற்றும் க.பொ.த (சா/த) கணித பாடத்தில் திறமைச்சித்தி.
 • க.பொ.த (சா/த) அல்லது அதற்கு சமமான இலங்கை அல்லது வெளிநாட்டு பரீட்சையில் ஒரே அமர்வில் கணிதம் உட்பட 5 திறமை சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தி

DABF பரீட்சைக்கான பரீட்சார்த்திகளை சேர்க்கும் விதிகள்

 • CBF அல்லது IABF வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துள்ள மாணவர்கள் DABFக்கு பதிவு செய்துகொள்ள முடியும்.
பாடத்திட்டம் / உள்ளடக்கம்

செயல்முறை வங்கி நடவடிக்கைமுறையில் இடைத்தரம் (6 பாடங்கள்: 4 கட்டாய பாடங்கள் அவற்றில் 2 விருப்புக்குரியது)

கட்டாய பாடங்கள்

 • நிதிசார் முறைமை அளவீடு
 • வர்த்தக வங்கி நடவடிக்கைமுறை
 • வியாபார கணக்குவைப்பு முறை
 • வங்கி நடைமுறை மற்றும் நிதிசார் சட்ட அறிமுகம்

விருப்புக்குரிய பாடங்கள்

 • பொருளாதார கோட்பாடுகள்
 • வங்கி நடைமுறையல்லாத நிதிசார் வியாபாரம்
 • நிதிசார் வாடிக்கையாளர்கள் முகாமைத்துவம்
 • வியாபார கணிதம் மற்றும் புள்ளிவிபரம் 3

வங்கி செயல்முறை மற்றும் நிதி டிப்ளோமா (7 பாடங்கள்: 4 கட்டாய பாடங்கள் 5 பாடங்களில் 3 விருப்புக்குரியது)

கட்டாய பாடங்கள்

 • காசு மற்றும் காசு கொள்கை பொருளாதாரம்
 • நிதிசார் முகாமைத்துவம்
 • சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி
 • கடன் முகாமைத்துவம்

விருப்புக்குரிய பாடங்கள்

 • நிதிசார் நிறுவகங்கள் முகாமைத்துவம்
 • நிதிசார் சந்தை செயற்பாடுகள்
 • முதலீட்டு வங்கி நடைமுறை
 • அபிவிருத்தி நிதி
 • மத்திய வங்கி நடைமுறை
கால எல்லை 06 மாதங்கள்
விரிவுரையும் செயல்முறையும் ஆங்கில மொழிமூலம் - செப்டம்பர் / மார்ச் பரீட்சை

இலங்கை CA பல்லூடக ஆங்கில மொழி நிலையம்

பதிவு செய்யப்பட்ட போதனா கல்லூரி

புதிய இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன் (நிறைவேற்று தரம்) என்பவற்றுக்கு வகுப்புகளை ஆரம்பித்தல்.

புதிய இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன் நிறைவேற்று தரம் (SE1) என்பவற்றுக்கு 2015ஆம் ஆண்டிலிருந்து வகுப்புகள் ஆரம்பமாகும்.

மாணவர்களின் கற்கை சந்தர்ப்பங்களை மேம்படுத்துவதற்கு வசதிப்படுத்தும் முயற்சிக்கு இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், நிறைவேற்று மட்டத்திலிருந்து உலக அங்கீகாரம் பெற்றுள்ள பட்டய கணக்காளர் நிறுவகத்தின் அனைத்து மாணவர்களின் தொடர்பாடல் திறனை விருத்திசெய்வதற்கு குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

இந்த அமைப்பில், இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், பயன்படுத்துகின்றவர்கள் நேசத்துடன் கற்கின்ற சூழலை ஏற்படுத்துவதற்காக இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், அதன் போதனா கல்லூரிகளுக்கு 35 மாணவர்களை வரையறுத்து வகுப்புகளின் அளவைக் குறைத்துள்ளது.

நிறைவேற்று மட்டத்தில் கற்கை நிகழ்ச்சித்திட்டத்தில் SE1 சேர்கின்ற அனைத்து மாணவர்களும் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றனர்.

கட்டாய SE1 மொடியுல்

நிறைவேற்று மட்டத்தில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் நிறைவேற்று மட்டத்திற்கு முன்னேறுவதற்கு முன்னர் தொடர்பாடல் மற்றும் மக்கள் திறன் (SE1) மொடியுல் கட்டாயமானதாகும். இந்த மட்டத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் (SE1) அறிவு மொடியுல்களை அல்லது அறிவு மொடியுல்களுடன் ஆரம்பிப்பதற்கு முன்னர் (SE1) மொடியுலை பூர்த்திசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து மாணவர்களும் சான்றுப்படுத்தப்பட்ட வியாபார கணக்காளர் (CBA) சான்றிதழைப் பெறுவதற்கு முன்னர் (SE1) மொடியுலை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய வேண்டும்.

கற்கை நிகழ்ச்சித்திட்டத்தின் கால எல்லை  5 மாதங்களுக்கு 80 மணித்தியாலங்களாகும். ஒரு வாரத்திற்கு 4 மணித்தியாலங்கள். இதில் நான்கு மொழித் திறன்களுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது. அவை வாசிப்பு, எழுதுதல், செவிமடுத்தல் பேசுதல் என்பவையாகும். இது இறுதிப் பரீட்சையில் பரீட்சிக்கப்படும்.

SE1 மொடியுலுக்கான போதனா கல்லூரிகள்

அனைத்து மாணவர்களின் வசதிக்காக பெரும் எண்ணிக்கையிலான இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதனா கல்லூரிகள் ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கின்றன. அங்கு SE1 மொடியுல் நடத்தப்படுகின்றது.

நீங்கள் பிரவேசிக்கலாம்: www.casrilanka.com/casl/index.php?option=com_content&view=article&id=112&Itemid=157&lang=enor SE1 மொடியுல் நடத்துவதற்கான பட்டய கணக்காளர் நிறுவகத்தின் தகவல் நிலையத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

SE1 மொடியுலுக்கான பதிவு

SE1 மொடியுல் கற்கை நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்வதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும்  பட்டய கணக்காளர் நிறுவகத்தில் தம்மைப் பதிவுசெய்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும். பாடநெறிக்கான பதிவு இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. பட்டய கணக்காளர் இணையத்தளத்திற்குள் மாணவர்கள் பிரவேசித்து தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடியும். வகுப்புகள் குறித்த போதனா கல்லூரிகளின் நேர அட்டவணை பிரகாரம் நடத்தப்படும்.

மாணவர்கள் அவர்களுடைய வதிவடத்திற்கும் வசதிக்கும் ஏற்ப குறித்த போதனா கல்லூரியைத் தெரிவுசெய்துகொள்ளும் வசதி உண்டு. எவ்வாறாயினும் முதல் வருகிறவர்களுக்கு முதல் சேவை என்ற அடிப்படையில் போதனா கல்லூரிகளில் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

அமர்த்தும் பரீட்சை

மாணவர்கள் அவர்களின் திறமையை அறிந்துகொள்ளுவதற்கு அல்லது உயர் திறனுள்ள மாணவர்கள் SE1 நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து விலக்குப் பெற விரும்பினால் அமர்த்தும் பரீட்சையில் அமரலாம். எவ்வாறாயினும் மாணவர்களுக்கு கற்கை நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டாலும் SE1 இறுதி பரீட்சையில் அவர்கள் தோற்ற வேண்டியது கட்டாயமாகும்.

SE1 மொடியுலுக்கான கொடுப்பனவு

SE1 மொடியுல் சம்பந்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இணையவழி ஊடாக இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்திற்குச் செலுத்த வேண்டும் அல்லது, எந்தவொரு இலங்கை வங்கி கிளையிலும் செலுத்தலாம் அல்லது, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தில் காசாளரிடம் செலுத்த முடியும்.

கொடுப்பனவு கட்டமைப்பு

பதிவு கட்டணம் ரூ. 1,000.00
பாட கட்டணம்

ரூ. 5,500.00 (2 தவணைகளில் செலுத்தலாம்)

 • 1ஆம் தவணை ரூ.3,000.00
 • 2ஆம் தவணை ரூ.2,500.00

AAT தகவல் நிலையம் கண்டி

இலங்கை கணக்கு வைப்புமுறை தொழில்நுட்பவியலாளர்களின் (AAT) சங்கம் அண்மையில் கண்டி பொல்கொல்லையில் அதன் புதிய தகவல் நிலையத்தைத் திறந்துவைத்தது.

அம்பாந்தோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தகவல் நிலையங்களைத் திறந்துவைத்ததன் பின்னர் இது நான்காவது AAT தகவல் நிலையமாகும். மாணவர்களின் தேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்காக அதன் மூலோபாய அமைவிடங்களில் கிளைகளையும் தகவல் நிலையங்களையும் இலங்கை AAT ஆளுகை பேரவை அதன் மூலோபாய வரிசையில் அதன் கிளை வலையமைப்பை விரிவுபடுத்தியது. தற்பொழுது இயங்குகின்ற நான்கு தகவல் நிலையங்களுக்கு மேலதிகமாக இலங்கை AAT நிறுவகத்திற்கு யாழ்ப்பாணம், குருணாகல், மாத்தறை  ஆகிய இடங்களில் உள்ள கிளைகள் கொழும்பு நாரஹேன்பிட்ட தலைமை நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு AAT நிலையத்தில் தற்பொழுது இருக்கும் முழுமையான சேவைகள் கண்டி நிலையத்தின் மூலமும் வழங்கப்படுகின்றது. இது வாரநாட்கள் முழுவதும் மு.ப. 8.00 மணி முதல் பி.ப. 4.30 வரை திறந்திருக்கும்.

கணக்கு வைப்புமுறையில் நடுத்தர முகாமைத்துவத்தை விருத்திசெய்வதை நோக்கமாகக்கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையின் கீழ் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் முன்னெடுப்பில் இலங்கை AAT நிறுவகம் 1987ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இது கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்குகின்றது. இது க.பொ.த சா/த, உ/த மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் தொழில்சார் கணக்காளர்களாவதற்கும் உயர் கல்வியைப் பெறுவதற்கும் மிகச் சிறந்த தகைமையை வழங்குகின்றது.

கண்டி (பொல்கொல்ல),
தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம்,
பொல்கொல்ல.

+94 667 559 669
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விஜயம் செய்யும் விரிவுரையாளர்கள் குழாம்

திரு. பீ.லக்ஷமன் பெரேரா இலங்கை ICMA சங்க உறுப்பினர் (அங்கத்துவ இலக்கம் 2333),
இலங்கை CA சங்க உறுப்பினர் (அங்கத்துவ இலக்கம் 3239)
திரு. எம்.எஸ்.எம். றம்சி B.Sc முகாமைத்துவம்(பொது) சிறப்பு - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
உள்ளக கணக்காய்வாளர் நிறுவகம் (IIA Inc) - USA
சான்றுப்படுத்தப்பட்ட உள்ளக கணக்காய்வாளர் (CIA)
அசோஸியேட்டட் பட்டய முகாமைத்துவ கணக்காளர் (ACMA)
திரு. ஹஸ்திக்க நிரஞ்சன வர்த்தக இளமானி,
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா
இறுதி - II இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தின் பரீட்சை - AAT
உறுப்பினர்
திரு. எம்.எஸ்.எம். பரீன் B.Sc முகாமைதத்துவம் (பொது) சிறப்பு - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
ACCA (UK) இறுதிப் பரீட்சையில் சித்தி
MBA வாசிப்பு - கொழும்பு பல்கலைக்கழகம்
திருமதி. உத்தரா ரூபசிங்க LLB- 2ஆம் வகுப்பு- மேற் பிரிவு - கொழும்பு பல்கலைக்கழகம்
சட்டத்தரணி
திரு. எஸ்.கே.ஜே. குணரத்ன LLB பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம்
சட்டத்தரணி
திரு. லக்சாந்த பிறைன் பொருளாதார (கௌரவ) இளமானி பட்டம் பேராதெனிய - இலங்கை பல்கலைக்கழகம்
சட்ட இளமானி பட்டம் திறந்த பல்கலைக்கழகம் இலங்கை
பட்டப்பின்படிப்பு டிப்ளோமா சந்தைப்படுத்தல் (SLIM)
சட்டத்தரணி
திருமதி. பீ.எஸ்.விஜேரத்ன கலை இளமானி ஆங்கில மொழிமூலம்- பேராதெனிய - பல்கலைக்கழகம்
முதுமானி கலை பட்டம் மொழி - ஆங்கில மொழிமூலம் - களனிய - பல்கலைக்கழகம்

Accredited Courses

Mr. Chanaka Dissanayake
Course Coordinator
viber2-5whatsapp2-5+94 714 425 989

Accredited Courses