விடுதி

மாணவர் விடுதி

image1 இரண்டு மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் ஓர் அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டுள்ளதோடு இரண்டு பொது குளியலறைகளம் இருக்கின்றன. இந்த விடுதிகளில் 125 பேர் தங்கியிருக்க முடியும். இது அமைதியான அழகான சூழலில் அமைந்திருக்கின்றது. புதிதாக அமைக்கப்பட்ட 'எச்' மண்டபத்தில் பொது குளியல் அறையும் 03 கட்டில்கள் போடப்பட்டுள்ள 06 அறைகள் இருக்கின்றன. இதில் 18 பேர் தங்கியிருக்க முடியும். மொத்த வதிவிட கொள்ளளவு 170 ஆகும்.

வர்த்தக விடுதி

இது மாணவர் விடுதி வகையைச் சேராது. இங்கு வெளி தரப்பினருக்கு வதிவிட வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் 03 விடுதிகள் இருக்கின்றன.

புதிய இரத்நாயக்க விடுதி புதிய இரத்நாயக்க மண்டபம் விசேட நபர்களுக்கும் வெளிநாட்டு குழுவினருக்கும் வதிவிட வசதிகளை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது குளிரூட்டப்பட்டுள்ளதோடு, இணைந்த குளியலறை மற்றும் வெந்நீர் வசதிகளும் உண்டு. இதில் 16 தனி அறைகளும் 4 இரட்டை அறைகளும் இருக்கின்றன. மொத்தம் 24 பேருக்கு வதிவிட வசதியுண்டு.
இரத்நாயக்க விடுதி இந்த விடுதியில் 11 அறைகள் இருக்கின்றன. 7 குளிரூட்டப்பட்ட அறைகளும் இணைந்த குளியல் அறைகளும் இருக்கின்றன. 4 அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளதோடு  பொது குளியலறை வசதிகளைக் கொண்டுள்ளது. மொத்தம் 22 பேருக்கு வதிவிட வசதியுண்டு.
புதிய இரத்நாயக்க இல்லங்கள் உறுப்பினர்களாக இருப்பவர்கள் குடும்பமாகத் தங்கியிருக்க விரும்பினால் ஒரு கூட்டுறவு சங்கமும் ஒரு நிறுவகத்தின் அணியும் இத்தகைய வசதிகளைப் பெற முடியும். இந்த இரு வீடுகளுக்கு இணைந்த குளியலறை வசதிகள் உண்டு. ஒவ்வொரு இல்லத்திலும் 3 கட்டில்கள் போடப்பட்ட 3 அறைகள் இருக்கின்றன. இரண்டு இல்லங்களிலும் மொத்தம் 14 பேருக்கு வதிவிட வசதியுண்டு.

உணவுகள்

This page is under construction

விரிவுரை மண்டபங்கள்

image1

இரத்நாயக்க மண்டபம்

இந்த மண்டபம் செயலமர்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்துவதற்கு மிகவும் உகந்தது. இதுவும் குளிரூட்டப்பட்டுள்ளது. இதில் ஒளிஎறி கருவியும் ஒளிபெருக்கி வசதியும் உண்டு. 55 பேருக்கு ஆசன வசதியுண்டு.

 


image2

றோச்டேல் மண்டபம்

இந்த மண்டபம் கல்விசார் குழு நடவடிக்கைகளையும் பயிற்களையும் நடத்துவதற்கு மிகவும் உகந்தது. இதுவும் குளிரூட்டப்பட்டுள்ளது. இதில் கட்புல செவிப்புல வசதி உண்டு. 60 பேருக்கு ஆசன வசதியுண்டு.


image3

வின்சன்ட் சுபசிங்க மண்டபம்

இந்த மண்டபத்தில் நவீன செவிப்புல வசதியும் மேடை நாடகங்களையும் திரைப்படங்களையும் காட்டுவதற்கு வசதியம் உண்டு. இவைபோன்ற ஏனைய செயற்பாடுகளுக்கும் வசதியுண்டு. 500 பேருக்கு ஆசன வசதியுண்டு. இது இந்த பிரதேசத்தின் கேட்போர்கூட வசதியை நிறைவுசெய்கிறது.

 


பீ. மண்டபம்

இந்த விரிவுரை மண்டபத்திற்கு வரலாற்று பெறுமதியுண்டு. இதில் கட்புல செவிப்புல வசதியுடன் 80 பேருக்கு ஆசன வசதி உண்டு.


புதிய றோச்டேல் மண்டபம்

இது மிகவும் அழகான அமைதியான பிரதேசத்தில் அமைந்திருப்பதனால் கல்விமான்களிடம் இந்த விரிவுரை மண்டபத்திற்குப் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதில் கட்புல செவிப்புல வசதியுடன் 80 பேருக்கு ஆசன வசதி உண்டு.


C 1 - C2 மண்டங்கள்

இவை சிறு குழுக்களுக்கு மிகவும் உகந்த மண்டபங்களாகும். இதற்கு வசதியான ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு  குளிரூட்டப்பட்டுள்ளது. C-1 அறையில் 35 ஆசனங்களும் C-2 அறையில் 20 ஆசனங்களும் (மொத்தம் 55 ஆசனங்கள்) இருக்கின்றன. அத்துடன் முழுமையான கட்புல செவிப்புல வசதியும் உண்டு.


பலநோக்கு கட்டிடம்

புதிய தகவல் தொழில்நுட்ப நிலையம் தொழில்சார் கல்வி நிறுவனத்துடன் இந்த பலநோக்கு கட்டிடத்தில் அமைந்துள்ளது. இதில் மூன்று விரிவுரை அறைகள் இருக்கின்றன. இவ்வனைத்து விரிவுரை அறைகளும் நவீன வசதிகளையும் வசதியான ஆசனங்களையும் கொண்டுள்ளன. 175 கல்விமான்களுக்கு உயர்மடட வசதிகளை வழங்க முடியும்.

போக்குவரத்து சேவை

image1 அலுவலக வாகனங்களுக்கு மேலதிகமாக கூட்டுத்தாபன வாகன பொதுச் சேர்மத்தில் உள்ள வாகனங்கள் அலுவலக கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவகத்திற்குச் சொந்தமான பேருந்து கல்விமான்களுக்கும் வெளி தரப்பினர்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் நிறுவகத்தின் மிகச் சிறந்த சொத்தாக இருக்கின்றது.

தகவல் தொழில்நுட்ப நிலையம்

இந்த நிறுவகத்தின் ஏனைய வசதிகளுடன் வந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிலையம் கணினி பாடநெறிகளுக்கு நிறுவகத்தின் சக்தியாக விளங்குகின்றது. கணினி பிரிவு நவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது. இங்கு 04 ஆய்வுகூடங்களும் 100 கணினிகளும் இருக்கின்றன. அனைத்து கணினிகளும் வலையமைப்புக்குட்படுத்தப்பட்டு இணையதள வசதிகளைக் கொண்டிருக்கின்றன. அதன் பிரகாரம் கணினி பிரிவு முழுமையான தகவல் தொழில்நுட்ப நிலையமாகக் கருதப்படுகின்றது.

கட்புல செவிப்புல வசதிகள்

வெளி நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற கூட்டுறவுத் துறையுடன் சம்பந்தப்பட்ட பாடநெறிகளுக்கு இந்த அலகு வசதிகளை வழங்குகின்றது. இந்த பிரிவில் விரிவுரைக்கான ஒளிஎறி கருவி, பல்லூடக வசதிகள் ஏனைய கட்புல முறைகள் என்பவை இருக்கின்றன. இந்த அலகு காணொளி மற்றும் காணொளி படக்காட்சிகளைப் பயன்படுத்தி நுண்கற்கை முறைமைகளுக்கான வசதிகளை வழங்குகின்றது. விசேட நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்களையும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தில் இடம்பெற்ற பல்வகை நிகழ்சிசிகள்பற்றிய புகைப்படங்களையும் சேகரிப்பது இந்த அலகின் இன்னுமொரு சேவையாகும். மேலும் இந்த அலகு கூட்டுறவு துறையுடன் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை தொலைக் காட்சிக்காகத் தயாரிக்கின்றது.

அச்சக வசதிகள்

press2இந்த அலகு நவீன ஓப்செட் அச்சு இயந்திரத்தையும் ஒரு டுப்லோ அச்சு இயந்திரத்தையும் கொண்டுள்ளது. இந்த அலகுக்காக நிறுவகம் ரூ.45 இலட்சம் முதலீடு செய்துள்ளது. நிறுவகத்தின் வெளியீடுகள் இங்கு அச்சிடப்படுகின்றன. மேலும் இந்த பிரிவை அரசாங்க, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் துறை அச்சு அலகுக்கு விரிவுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை இல்லம்

holiday resort 3 தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் ஓர் அரசாங்க நிறுவகம் என்ற வகையில் கல்வி நடவடிக்கையோடு சேர்த்து 3 விடுமுறை இல்லங்களையும் நடத்துகிறது. இந்த விடுமுறை இல்லங்கள் அமைதியான அழகான சூழலில் அமைந்திருக்கின்றன. இங்கு நியாயமான விலைக்கு வதிவிட, உணவு சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஏனைய வசதிகள்

திரு. துஷார விஜேரத்ன
உதவி விடுதி முகாமையாளர்
+94 725 305 681

hostal reser

holiday reser

lecture reser

auditorium reser