தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவானது, மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அரச மற்றும் தனியார் துறையின் சிறந்த கணினி நிலையமொன்றாக உள்ளது.
இரண்டு பிரிவுகளின் கீழ் இயங்கிவருகின்ற கணினிப் பிரிவு கூட்டுறவுத் துறையின் கல்விமான்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகின்ற பாடநெறிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வளவிலுள்ள கணினி நிலையத்தில் 24 கணினிகள் ஒதுக்கப்பட்டு கற்கை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலைக் கல்வியைப் பயிலும் மற்றும் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து தகவல் தொழில்நுட்பத் துறையில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்புடன் உயர் பாடநெறிகளை தேடுகின்ற பிள்ளைகளுக்கான பாடநெறிகளை வழிப்படுத்தும் மற்றும் தொழில்சார் பாடநெறிகளின் தகவல் தொழில்நுட்ப பாடத்தை உள்ளடக்கியதாக பல்தேவைக் கட்டிடத்தில் தாபிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் 55 கணினிகள் மாணவர்களின் உபயோகத்திற்கென ஒதுக்கப்பட்டு பேணிவரப்படுகின்றன.