NICD
நூலகம்
கூட்டுறவு இயக்கத்தில் தகவல் தேடுகின்றவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக 1945ஆம் ஆண்டு இந்த நூலகம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நூலகத்தை பிரதானமாக நிறுவகத்தின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் குழாம் மற்றும் ஏனைய தேசிய கூட்டுறவு அபிவிருத்தி பணியாட்தொகுதியினர் ஆகியோர் பயன்படுத்துகின்றனர்.
சேகரிப்பு
இந்த நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை 21,936 ஆகும். இங்கு பிரதானமாக கூட்டுறவுத் துறையுடன் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட நூல்கள் இருக்கின்றன. அவற்றில் முகாமைத்துவம், கணக்கு வைப்புமுறை, பொருளாதாரம், சமூகவியல், கணினி மற்றும் தகவல் விஞ்ஞானம் போன்ற நூல்களும் உள்ளடங்குகின்றன.
மேலும் இங்கு கூட்டுறவுத் துறையுடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனை முக்கியமான ஆவணங்கள் விசேட சேர்க்கைகளாக இருக்கின்றன. சிறிய பருவ வெளியீடுகளும் இந்த நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிரிவுகள்
முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
இரவல்கொடுத்தல் பிரிவு
உசாத்துணை பிரிவு
சேவைகள்
இரவல்கொடுத்தல், உசாத்துணை, நிகழ்கால விழிப்புணர்வூட்டும் சேவைகள், செய்தி குறிப்புகளை வெட்டி சுட்டென் இடுதல், தகவல்களை மீளப் பெறுதல்.