தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறோம்...

NICD விடுதிகள்


வளிச்சீராக்கல் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அறைகளை கொண்டதாக தனியான மற்றும் இருவருக்கான அறை வசதிகளுடன் ஒரே தடவையில் 222 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக 7 விடுதிகள் இங்கு காணப்படுகின்றன. விடுதி வசதிகளுக்கு மேலதிகமாக கூட்டுறவுத்துறை, அரச துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஆட்களுக்கு தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக சகல வசதிகளையும் கொண்ட சுற்றுலா விடுதியும் விடுதிப் பிரிவுக்கு உரித்தானதாகக் காணப்படுகின்றது.

ரத்நாயக்க விடுதி
இந்த விடுதி முழுமையாக வளிச்சீராக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இருவருக்கான 12 அறைகளைக் கொண்டுள்ளது. இதில் குளியல் அறை வசதிகளைக் கொண்டதாக 08 அறைகளும், பொதுக் குளியல் அறை வசதிகளைக் கொண்டதாக 4 அறைகளும் காணப்படுகின்றன. இந்த ஒட்டுமொத்த விடுதியில் ஒரே தடவையில் 22 பேருக்கான தங்குமிட வசதிகள் காணப்படுகின்றன.

புதிய ரத்நாயக்க விடுதி
முழுமையாக வளிச்சீராக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விடுதியில், இருவருக்கான 04 அறைகள் மற்றும் 16 தனி நபர் அறைகளைக் கொண்டுள்ளதுடன் இதன் சகல அறைகளும் குளியல் அறை வசதிகளைக் கொண்டதாக காணப்படுகின்றன. இந்த விடுதியில் ஒரே தடவையில் 24 பேருக்கான தங்குமிட வசதிகள் காணப்படுகின்றன.

ரத்நாயக்க இல்லம்
இங்கு இரண்டு வீடுகள் காணப்படுவதுடன் ஒரு வீட்டில் 03 அறைகள் வீதம் குளியல் அறை வசதிகள் சகிதம் இரண்டு வீடுகளிலும் 14 பேருக்கான தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

D/E/F/G விடுதி
04 விடுதிக் கட்டிடங்களில் இருவருக்கான 72 அறைகள் காணப்படுவதுடன், இந்த விடுதியில் ஒரே தடவையில் 144 பேருக்கான தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஒவ்வொரு விடுதிக்கும் தனியான பொதுக் குளியல் அறைகள் காணப்படுகின்றன.

H விடுதி
இந்த விடுதி மூன்று பேர் இருக்கக்கூடிய 06 அறைகளைக் கொண்டுள்ளதுடன், பொதுக் குளியல் அறையும் உள்ளதுடன், 18 பேருக்கு ஒரே தடவையில் தங்குமிட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.