வரலாற்று முக்கியத்துவமிக்க தளதா மாளிகைக்கு சுமார் 08 கிலே மீற்றர் தூரத்திலிருந்து இலகுவாக சென்றடையக்கூடிய கண்டி – மடவளை ஊடாக வத்தேகம வீதியில் மகாவளி அணைக்கட்டுக்கு அருகாமையில் மற்றும் மகிந்த ராஜபக்~ கேட்போர் கூடத்திற்கு அருகாமையில் இந்த சுற்றுலா விடுதி அமைந்துள்ளது.
வளிச்சீராக்கல் செய்யப்பட்ட பிரதான அறைகள் இரண்டும் (ஆயளவநச டீநன சுழழஅ) இருவருக்கான இரண்டு அறைகளும் (Double Room – with Single Bed) சொகுசு சோபா மற்றும் உணவு மேசையைக் கொண்டதும் வளிச்சீராக்கல் செய்யப்பட்ட இருக்கை அறையைக் கொண்டதுமாக இது காணப்படுகின்றது.
தும்பர பள்ளத்தாக்கில் எப்பொழுதும் நிலவும் இதமான காலநிலை மற்றும் சுற்றுலா விடுதியைச் சூழ்ந்ததாகக் காணப்படுகின்ற முற்று முழுவதும் திறந்த வெளியைக் கொண்ட சுதந்திரமான, பசுமையான அமைதிச் சூழல் குடும்பத்தவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுடன் மனக்கவளைகளை மறந்து இருப்பதற்கு மிகவும் பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.