நிறுவகத்தின் நூலகம் இந்நாட்டின் கூட்டுறவுத் துறைக்கு உரித்தான வளர்ச்சியடைந்த நூலகமாகக் கருதப்படுகின்றது. பல்வேறு துறைகளிலும் எழுதப்பட்டுள்ள தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம்மிக்க நூல்கள், பருவகால சஞ்சிகைகள் என்பன சுமார் இருபத்தோராயிரம் இங்கு காணப்படுகின்றன. மேலும் இங்கு கூட்டுறவுத் துறை சம்பந்தமான நூல்களின் தொகுதியொன்று தனியாக பேணிவரப்படுவதுடன், பத்திரிகை ஆக்கங்கள், சஞ்சிகைகளின் தொகுப்பொன்றும் பேணிவரப்படுகின்றது. நூலக சூசிகை கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றது.
நூலக சேவைக்கு உரித்தான இணையத்தள வசதிகளையும் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.