கூட்டுறவு விடயம் தொடர்பில் நடாத்தப்படுகின்ற பல்வேறு பாடநெறிகள் மற்றும் வெளி நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான கற்புல, செவிப்புல வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. விரிவுரை மண்டபங்களுக்கான ஹெட் புரொஜெக்டர்ஸ், மல்ரிமீடியா இயந்திரங்கள், கற்புல, செவிப்பு உபகணரங்கள் போன்ற தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் “வீடியோ” செய்வதைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் “மைக்ரோ ரீசின்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வசதியையும் இப்பிரிவிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், வீடியோ திரைப்படங்களை காட்சிப்படுத்தும் வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம். கூட்டுறவுத் துறை தொடர்பில் நடாத்தப்படுகின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் வைபவங்களின் விசேட நிகழ்வுகளை உள்ளடக்கியதாக புகைப்படத் தொகுப்பொன்றைப் பேணிவருவதும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றொரு சேவையாகும்.